ATMமில் பணம் எடுக்க போன பெண்; pan card number பல கோடி..பகீர் ட்விஸ்ட்!
மர்ப கும்பல் ஒன்று பான் கார்டை பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி மோசடி ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 35). இவர் தனியார் நிறுவன மேலாளராக உள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவியின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றுள்ளார்.அப்போது பணம் வராததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே அவர் வங்கிக்குச் சென்று அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். அப்போது உங்கள் மனைவி பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதற்கு ஜி.எஸ்.டி.யாக ரூ.2 கோடியே 95 லட்சம் செலுத்தாமல் இருப்பதால் உங்கள் மனைவியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதனால் செய்வது அறியாது திகைத்த இளையராஜா கோவையில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்துக்குச் சென்று விசாரித்துள்ளார். அங்கு அவருடைய மனைவி பெயரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு முதல் நிறுவனம் ஒன்று நடத்தப்பட்டு வந்துள்ளது.
பான்கார்டு
அந்த நிறுவனத்தின் ஜி.எஸ்.டி. கணக்கில் இளையராஜா மனைவியின் பான்கார்டு எண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.2.95 கோடி மோசடியில் ஈடுபட்டதால் அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இந்த மோசடி சம்பவம் குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் இளையராஜாவும் அவரது மனைவியும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது தெரியாதவர்கள் உங்கள் பான் கார்டை கேட்டால் கொடுக்க வேண்டாம்.