இனி ஆதார் பெயர் மாற்றத்திற்கு பான் கார்டு செல்லாது - முழு விவரம்
இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது.
ஆதார் பெயர்
ஆதார் அட்டையில் இதற்கு முன்பாக 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல் ஒன்றும் , 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகையான ஆவணப் பட்டியல் மட்டுமே இருந்தது.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 4 வகையான புதிய ஆவணப் பட்டியலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் 5 வயதிற்கு உட்பட்டவர்கள், 5 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என 4 வகையான ஆவணப் பட்டியல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பான் கார்டு செல்லாது
இதில் குறிப்பாக ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய 'யுதய்' அனுமதித்த ஆவணப் பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது புதிதாக வெளியிட்டுள்ள ஆவணப் பட்டியலில் பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது.

அதாவது இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது. பான் கார்டில் முகவரி குறிப்பிடப்படவில்லை. பெயர் தவிர மற்ற அடையாள உறுதிப்படுத்தும் விவரங்கள் குறைவாக உள்ளன. மாறாக, இந்திய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு (புகைப்படம் இருக்கும் குடும்ப தலைவர் மட்டும்),
வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைக்கலாம்.