பல்லடம் கொலை வழக்கு...முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்..!!
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல்லடம் கொலை சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான வெங்கடேஷை போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர்.
பல்லடம் கொலை வழக்கு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வரும் 47 வயதான செந்தில் குமாரின் வீட்டின் முன்பு இரவு 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்ட நிலையில், அதன் காரணமாக ஆத்திரமடைந்த அக்கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது.இந்த கொடூர சம்பவத்தின் போது, தடுக்க சென்ற செந்தில் குமாரின் தம்பி மோகன்ராஜா, அவருடைய தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
நாடகமாடிய வெங்கடேஷ்
இந்த சம்பவத்தின் விசாரணையில் ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமாருக்கும், 34 வயதான வெங்கடேஷ் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையா, நேற்று முன்தினம் திருப்பூர் வடக்கு போலீஸாரிடம் சரணடைந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கள்ளக்கிணறு அருகேயுள்ள தொட்டம்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பல்லடம் டிஎஸ்பி சவுமியா தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை வெங்கடேஷை, தொட்டம்பட்டிக்கு அழைத்துச் சென்று அங்கு புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, மீண்டும் பல்லடம் விரைந்தனர்.
அப்போது வெங்கடேஷ் சிறுநீர் கழிப்பதாக கேட்க வாகனத்தை நிறுத்த 2 போலீசார் பாதுகாப்புடன் இறங்கியபோது திடீரென்று வெங்கடேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனால் போலீசார் வேறு வழியின்றி வெங்கடேஷின் 2 கால்களிலும் சுடசுருண்டு விழுந்த வெங்கடேஷை பிடித்துள்ளனர். முதலுதவி சிகிச்சை பிறகு தற்போது வெங்கடேஷ், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவுள்ளார்.