பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குதித்த இளைஞர்!! பரபரப்பான சேப்பாக்கம்!!
சென்னை சேப்பாக்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாலஸ்தீன ஆதரவு பதாகைகள் காட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்ரேல் பாலஸ்தீன் போர்
கடந்த வாரம் சனிக்கிழமை முதல் ஹமாஸ் அமைப்பினர் காஸா நகரில் நடத்தி வரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு 1000 தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வெளித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலின் தெற்குப் பகுதியின் பல இடங்களில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் ஹமாஸின் 500 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
போர் தீவிரமடையும் நிலையில், உலக மக்களுக்கு பயத்தை அளிக்கும் வகையில் அங்கங்கே பலரும் இரு தரப்பினருக்கும் ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருதரப்பு ஆதரவு மக்களும் பேரணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
சேப்பாக்கத்தில் பரபரப்பு
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் இந்த போர் தொடர்பாக பாதகைகள் கொண்டு வரப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து - வங்கதேச அணிகள் நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதின.
இந்த போட்டி நடந்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் திடீரென பாலஸ்தீனுக்கு ஆதரவாக பதாகையை காட்டி இருக்கிறார். உடனடியாக போலீசார் அங்கே விரைந்து, பதாகை காட்டிய இளைஞரையும் அவரின் நண்பரையும் மைதான கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்நபர் வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஹசன் என்பது தெரிய வந்ததுள்ளது. அவரது உறவினரின் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்னை வந்த ஹசன், வங்கதேச போட்டி நடைபெற்றதால் அதனை காண அவரது நண்பருடன் வந்துள்ளார்.