கர்நாடக வனத்துறையினரால் தமிழக மீனவர் சுட்டுக்கொலை ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - இபிஎஸ்
கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் குடும்பத்தக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும் அரசு அறிவித்த நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் 1/2
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 18, 2023