ஓபிஎஸ்-க்கு வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்: எம்ஜிஆர் பாடலை பாடி அசத்தல்

karthik Panneerselvam aiadmk palaniswami
By Jon Mar 27, 2021 07:17 AM GMT
Report

தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்காக மக்களிடம் வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக் எம்ஜிஆர் பாடலை பாடி அசத்தினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார் ஓ.பன்னீர்செல்வம்.

இவருக்கு ஆதரவாக அவரது மகன் உட்பட பல தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகரும், மனித உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் போடி நகர் பகுதி, கோடாங்கிபட்டி, பத்ரகாளிபுரம் மற்றும் விசுவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ”உன்னை அறிந்தால்!, நீ அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்கிற எம்ஜிஆர் பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.  



Gallery