பழனிசாமி இந்நேரம் ஜெயிலுக்கு போயிருப்பார்: மு.க ஸ்டாலின் விமர்சனம்
முதல்வர் பழனிசாமி உருண்டு வந்து முதல்வர் ஆனவர் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில், ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை, திருப்போரூர் விசிக வேட்பாளர் s.s.பாலாஜி, தாம்பரம் வேட்பாளர் எஸ்ஆர் ராஜா, செங்கல்பட்டு வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின் , கடந்த 50 ஆண்டுகளாக பல பதவிகளை வகித்தவர் நான் படிப்படியாக இந்த நிலைக்கு வந்துள்ளேன்என சொல்லிக் கொண்டு உருண்டு வந்தனர். அவரைப் பார்த்து நாடு சிரிக்கிறது . அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்பதை கேள்விப்பட்டிருப்போம். சசிகலாவை முதல்வரான எடப்பாடி பழனிசாமி தற்போது ஜெயலலிதாவால் தான் நான் முதல்வரானேன் என கூறி வருகிறார் என ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக அமைப்புச் செயலாளரான ஆர்எஸ் பாரதி முதல்வர் பழனிசாமி மீது டெண்டர் விவகாரத்தில் ஊழல் என்று வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டபோது, டெல்லி தலைமை தலையிட்டு உத்தரவை திரும்பப் பெற்றது.
ஒரு வேளை உத்தரவுக்கு தடை வராமல் இருந்தால் இந்நேரம் ஜெயிலுக்கு போயிருப்பார் என்றார்.