ஜெயலலிதா கோவிலில் தீக்குளித்த பழனிசாமி உயிரிழப்பு

dead aiadmk jayalalithaa palaniswami
By Jon Mar 17, 2021 04:23 PM GMT
Report

ஜெயலலிதா மண்டபத்தில் தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருமங்கலம் தாலுகா தே.கல்லுப்பட்டி அருகே உள்ள சந்தையூரை சேர்ந்தவர் பழனிசாமி (57), கடந்த 14-ஆம் தேதி சந்தையூர் வாக்குச்சாவடி முகவர் பணிக்கு தன்னை சேர்க்கவில்லை என அதிமுக நிர்வாகிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

தொடர்ந்து நிர்வாகிகள் குறித்த பணியை தர மறுத்ததால், ஜெயலலிதா கோவிலில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடலில் தீப்பற்றி எரிந்ததும், சிலை அருகே மயங்கி சரிந்தார், இதைப்பார்த்தவர்கள் உடனடியாக பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி உயிரிழந்தார், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.