‘‘திமுகவினர் புரோட்டா பிரியாணிக்கு காசு கொடுக்க மாட்டார்கள்’’: முதல்வர் பழனிசாமி கிண்டல்
கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர்.புரோட்டா பிரியாணிக்கு காசு கொடுக்காதவர்கள் திமுகவினர் என கிண்டல் செய்தார். சட்டமன்ற தேர்தல் இன்னும் 16 நாட்களில் நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய முதல்வர் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டம் ஆக்கியது அதிமுக அரசுதான் . புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியோடு அரசு மருத்துவமனையும் வர உள்ளது.
மேலும் ,ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கள்ளக்குறிச்சி அருகே செயல்பட்டு வருகிறது. என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரியாணி புரோட்டா சாப்பிட்டுவிட்டு திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள். ஓட்டல்களில் பிரியாணி, பரோட்டா சாப்பிட்டு காசு தராமல் திமுகவினர் சென்றுவிடுவார்கள் .
10 ஆண்டு ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் திமுகவினர் கோரப்பிடியில் உள்ளனர் என விமர்சனம் செய்தார்.