மீண்டும் பழனிசாமி முதலமைச்சராக அமர்வார்: வாக்களித்த பின் அமைச்சர் எஸ்பி வேலுமணி
தமிழகத்தில் சட்டமன்றத் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின்பு அமைச்சர் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக அமோக வெற்றி பெறும்.
மீண்டும் பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறோம். எவ்வித விதிமுறை மீறலிலும் நாங்கள் ஈடுபடவில்லை.
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி வேலுமணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கொடுத்த மனுவிற்கு பதிலளித்த அவர், தகுதி நீக்கம் செய்ய வேண்டுமானால் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட ஐந்து வேட்பாளர்களைத்தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தோல்வி பயத்தாலே இவ்வாறான புகார் கொடுக்கிறார்கள் என்றார்.