‘‘குறை பிரசவத்தில் பிறந்த பழனிசாமி” – விளக்கம் கொடுத்த ஆ.ராசா
முதல்வரை அவதூறாக விமர்சித்ததாக அதிமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த நிலையில் ஆ.ராசா விளக்கமளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக எம்.பி. ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பிரச்சார கூட்டத்தில் பேசியாஅ.ராஜா, நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின். கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் பழனிசாமி. நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார். என கூறினார்.

ஆ.ராசாவின் இந்த பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம் .பி. ஆ.ராசா அளித்துள்ள பதிலில் ,முதல்வர் பழனிசாமி பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை . எனது பேச்சு வெட்டியும் ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது.
ஸ்டாலின் , முதல்வர் இருவரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசியது தவறாக வெட்டி, ஒட்டி பரப்புகின்றனர்.
அதை தவறாக புரிந்துக்கொண்டால் அதற்காக நான் பொறுப்பேற்க முடியாது என்பதை பணிவுடன் கூறிக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.