‘‘எடப்பாடி பழனிசாமி முதல்வரானது ஒரு சரித்திர விபத்து’’ - கார்த்திக் சிதம்பரம்
அதிமுகவும் சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும் இது எனது அரசியல் கணிப்பு என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பெரிதும் பேசும் பொருளாக மாறியவர் அவரது தோழி சசிகலா.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என பலரும் நினைத்தபோது அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குஇ முன்புஅதிமுக தொண்டர்களுடன்சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், திமுகவும் சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானது ஒரு சரித்திர விபத்து என்றும் அந்த கதை முடிந்து விட்டது என் கூறினார் .
மேலும், தற்போது நிலவும் தடுப்பூசி தட்டுபாட்டிற்கு பிரதமர் மோடிதான் காரணம் என கூறிய அவர். மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா அதனால் மத்திய அரசை ஒன்றியம் என அழைப்பது தவறில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.