பழனி கோயில் நில மோசடி வழக்கு: சிறையில் இருந்த அன்வர்தீன் மரணம்
பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழனி கோயில் நில மோசடி வழக்கில் பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது சிபிசிஐடி போலிசார் வழக்குபதிவு செய்தனர்.

இவர்களில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை அன்வர்தீன் மற்றும் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டனர், இவர்கள் பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்த போதும் திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் பாக்கியராஜ் தள்ளுபடி செய்தார்.
இதனை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர், இந்நிலையில் நேற்றி இரவு அன்வர்தீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதே உயிரிழந்தார்.
ஏற்கனவே அவருக்கு சர்க்கரை நோய் பக்கவாதம் தொடர்பான பாதிப்புகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.