பழனி கோவிலுக்கு முதுகில் அலகு குத்தி ஆம்னி வேனை இழுத்து வந்த பக்தர் : மக்களுக்காக நூதன நேர்த்திக்கடன்

temple farmer palani consecration
By Anupriyamkumaresan Sep 14, 2021 10:28 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

 உலக மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் இருந்து விடுபட வேண்டி முருகபக்தர் ஒருவர் முதுகில் அலகு குத்தி காரை இழுத்தவாறே நேர்த்திக்கடன் செலுத்தினார்.

ஈரோடு மாவட்டம் அத்தன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பணநாடார். விவசாயியான இவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்‌. அப்போது தனது முதுகில் அலகு குத்தி ஆம்னி வேனை கயிற்றால் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

பழனி கோவிலுக்கு முதுகில் அலகு குத்தி ஆம்னி வேனை இழுத்து வந்த பக்தர் : மக்களுக்காக நூதன நேர்த்திக்கடன் | Palani Temple Farmer Consecration In Temple

உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அல்லல்படுவதில் இருந்து விடுபட்டு உலகநலன் வேண்டி இந்த நேர்த்திக்கடன் செலுத்துவதாக தெரிவித்தார். முதுகில் அலகு குத்தி அதில் கயிற்றைக்கட்டி ஆம்னி வேனை இழுத்தபடியே காவடியும் சுமந்தபடி கிரிவலம் வந்து வழிபட்டு, மொட்டை அடித்து நேர்த்திக்கடன்‌ செலுத்தினார்.

75வயது முதியவர் ஒருவர் அலகு குத்தி வேனை இழுத்து நேர்ததிக்கடன் செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.