பழனி கோயிலுக்கு நீதிமன்றம் உத்தரவு..எதிராக நகராட்சியே போராட்டம்? நீதிபதிகள் அதிருப்தி!

Tamil nadu Madras High Court Dindigul
By Swetha Jul 27, 2024 11:07 AM GMT
Report

நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சி போராட்டத்தில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

பழனி கோயில்

பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் ஆட்சியர் விசாரிக்க உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பழனி கோயிலுக்கு நீதிமன்றம் உத்தரவு..எதிராக நகராட்சியே போராட்டம்? நீதிபதிகள் அதிருப்தி! | Palani Municipality Protest Against Hc Order

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, பழனி கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், கிரிவலப் பாதையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தும் விதமாக ஆக்கிரமப்புகளை அகற்றி அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதியை செய்யவும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து 152 ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அகற்றப்பட்டது. இவ்வழக்கின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பழனி கோவில் கருவறை ஃபோட்டோ எப்படி பரவியது - விளாசிய உயர்நீதிமன்றம்!

பழனி கோவில் கருவறை ஃபோட்டோ எப்படி பரவியது - விளாசிய உயர்நீதிமன்றம்!

நகராட்சி போராட்டம்

அப்போது மனுதாரர் ராதாகிருஷ்ணன், “நீதிமன்ற உத்தரவுப்படி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் எளிமையாக சென்று சாமி தரிசனம் செய்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பழனி கோயிலுக்கு நீதிமன்றம் உத்தரவு..எதிராக நகராட்சியே போராட்டம்? நீதிபதிகள் அதிருப்தி! | Palani Municipality Protest Against Hc Order

பழனி கோயில் தேவஸ்தான அலுவலகம் முன்பு நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார். தொடர்ந்து நீதிபதிகள், "பழனி நகராட்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதா?

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டதா என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.