பழனி அருகே நூல் தயாரிக்கும் ஆலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து...!

Tamil nadu Fire Accident
By Nandhini Nov 28, 2022 05:56 AM GMT
Report

பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் நூல் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நூல் ஆலையில் பயங்கர தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் நூல் ஆலையில், சாயம் ஏற்றும் பிரிவில் இன்று காலை 7 மணி அளவில் பாய்லர் பிரிவில் வைக்கப்பட்டிருந்த ஆயில்களில் தீ பிடித்து எரியத் தொடங்கியது.

உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேறி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சற்று நேரத்தில் ஆயில் கேன் மூலம் தீ பற்றி மிக சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது.

இதனையடுத்து தீ கொழுந்துவிட்டு மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

மணிக்கணக்காக போராடி தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

palani-fire-accident-dindigul-district