பழனியில் நகர பேருந்துகள் இயங்காததால் பயணிகள் ஏமாற்றம், கோரிக்கை!
பழனியில் நகரப்பேருந்துகள் அதிகளவு ஓடாததால், பேருந்தில் பயணிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் 11மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் படி இன்று அதிகாலை முதலே பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அலைமோதினர். இந்த நிலையில் போதிய ஓட்டுநர் இல்லாத காரணத்தால், சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் நகரப்பேருந்துகள் அதிகளவு ஓடாததால் பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
சில கிராமங்களுக்கு மட்டும் ஒரு சில பேருந்துகள் சென்று வருகின்றன. அதிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் வகையில் கூடுதல் பேருந்துகளை
இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil
