ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்த இளைஞர்கள் : அதிரடியாக வெளியேற்றிய அமைச்சர், நடந்தது என்ன?
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்த வீரர்கள் முறைகேடாக விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலமேட்டின் முடுவார்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் எண் 17 என்பவர் 8 காளைகளை பிடித்து 2 வது இடத்தை பிடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் சக்கரவர்த்தி என்பவரின் பெயரில் வாங்கிய சீருடையை அணிந்து மோசடியாக விளையாடியது வருவாய்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரை காவல்துறையிடமும் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இதே போல் 5 காளைகளை பிடித்து 3 வது இடத்தில் உள்ள சின்னப்பட்டி தமிழரசன் என்பவரும், முடுவார்பட்டியை சேர்ந்த கார்த்தி என்பவரது சீருடையை மோசடியாக அணிந்து விளையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது
அவரையும் வருவாய்த்துறையினர் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர்.மேலும் 9 காளைகளை பிடித்து முதலிடத்தில் உள்ள சரங்தாங்கியை சேர்ந்த சிவசாமி என்பவர், மன்னாடிமங்களத்தை சேர்ந்த கார்த்திகிராஜா என்பவரின் சீருடையில் விளையாடியதாக புகார் எழுந்த நிலையில், அவரது ஆவணங்களை வருவாய் துறையினர் சோதனை செய்தனர்.
ஆய்வு செய்ததில், முதலிடத்தில் உள்ள கார்த்திக் ராஜா ஆவணம் சரியாக இருந்ததால் அவரை போட்டியில் தொடர்ந்து விளையாட வருவாய்த்துறை அனுமதி அளித்துள்ளனர். அவரது சகோதரர் பெயர் சிவசாமி என்பதால் உரிய ஆவணத்தை காண்பித்ததால் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.