திமிரும் காளைகள் , அடக்கும் காளையர்கள் : பாலமேடு ஜல்லிக்கட்டு சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தொடர்ந்து மதுரை அருகே உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 650 காளைகள் களத்தில் களமாடின. இதில் 24 மாடுகளை அடக்கி முதல் பரிசை பிடித்தவருக்கு காரும், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 2 வது சுற்று நிறைவுபெற்றது, இந்த  சுற்றின் முடிவில் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்துள்ளார்.

5 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மதுரையில் உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அடங்க மறுக்கும் காளைகளை, வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்