‘’ மிரட்டும் காளைகள் , மிரள வைக்கும் காளையர்கள் ‘’ : அவனியாபுரத்தை தொடர்ந்து பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி

jallikattu palamedu
By Irumporai Jan 15, 2022 04:36 AM GMT
Report

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தொடர்ந்து மதுரை அருகே உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடத்த அனுமதி வழங்கியது தமிழக அரசு. கடந்த ஆண்டு பாதிப்பு கொரோனா குறைவாக இருந்த நிலையில் , ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு என்பது உச்சத்தில் இருந்த நிலையிலும், மக்களின் உணர்வினை மதித்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில் நேற்று கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 650 காளைகள் களத்தில் களமாடின. இதில் 24 மாடுகளை அடக்கி முதல் பரிசை பிடித்தவருக்கு காரும், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த் நிலையில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. 7:30 மணிக்கு தொடங்கிய இப்போட்டி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது .

ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 காளைகள் பங்கேற்க உள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு காங்கேயம் பசு மாடும் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்க காசுகள் ,கிரைண்டர், குக்கர் ,கட்டில், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் காத்திருக்கின்றன. இதனால் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.