‘’ கொம்பு வச்ச சிங்கம்டா இது ஜல்லிக்கட்டு காளடா ‘’ : பாலமேடு ஜல்லிகட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் பரிசை வென்ற பிரபாகரன்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போதுநிறைவடைந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் என்பவர் ஏழு சுற்றுகள் முடிவில் இருபத்தி ஏழு காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார்.

இவர், 2020, 2021 ஆம் ஆண்டிலும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கி 2-வது இடம் பிடித்த கார்த்திக் ராஜாவுக்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான பரிசை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சூலிவளி என்பவரது காளை பெற்ற நிலையில், அந்த காரின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்