பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடு பிடி வீரர் உயிரிழப்பு - குடும்பத்தினர் கதறல்
பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 மாடுகளை பிடித்திருந்த வீரர் அரவிந்த் ராஜன் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாடு பிடி வீரர் உயிரிழப்பு
உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காலை முதல் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்ற வீரர் அரவிந்த் ராஜன் 9 மாடுகளை பிடித்து 3 வது இடத்தில் இருந்தார்.
இந்த நிலையில் களத்தில் இருந்த பாலமேடுவைச் சேர்ந்த அரவிந்த் ராஜனை மாடு முட்டியது இதில் வயிற்றில் குடல் வெளியே வந்த நிலையில் அவருக்கு அவசரமாக முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மாடு முட்டியதில் அரவிந்த் ராஜன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.