ஒரே கல்லில் பங்களா; வைரலாகும் வீடியோ - ஆச்சர்யம், ஆனால் உண்மை!
பிரம்மாண்ட கல்லில் கட்டப்பட்ட வீட்டின் வீடியோ வைரலாகி வருகிறது.
கல்லில் கட்டப்பட்ட வீடு
இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் பிரியம் சரஸ்வத். இந்தியா மற்றும் அமெரிக்காவின் சிறந்த வீடுகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அறியப்பட்டார்.
இவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அதில் இந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் இயற்கை அழகைக் காட்டுகிறார். இது நேரடியாக பிரமாண்டமான கல்லில் கட்டப்பட்டுள்ளது.
வீடியோ வைரல்
நகரத்தின் காட்சிகளை பார்க்க கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கை போன்ற அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு நீச்சல் குளமும் உள்ளது. வீட்டின் ஒவ்வொரு அம்சமும் அதன் அடியில் உள்ள
இயற்கை கல்லில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை 5.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்து கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.