திமுக-வை தூக்கி போட்டுட்டு வாங்க: காங்கிரஸிற்கு தூதுவிடும் பழ.கருப்பையா
10 சீட்டு, 15 சீட்டுக்கிற்காக திமுகவிடம் காத்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல என மக்கள் நீதி மய்யத்தில் அண்மையில் இணைந்த பழ கருப்பையா கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ கருப்பையா. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஜெயிக்க போவதில்லை.
இப்போது தோற்பதில் ஒன்றும் குடி முழுகி போய்விடாது. யானை படுத்தால் குதிரை மட்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப காங்கிரஸ் நல்ல கட்சியாகும். மோடியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒரே அணியாக திரள வேண்டும். பாஜகவின் பி டீம் பாஜகவின் பி டீம் என மக்கள் நீதி மய்யம் கட்சியை கூறும் திமுகதான் பாஜகவின் பி டீம் ஆகும். ஊழலை ஒழிக்க வேண்டும்.
மக்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்களே என குறை கூறும் கிளைக் கட்சிகள் தலைமை கட்சியிடம் பணம் பெற்றுக் கொண்டு ஊழலுக்கு துணை போகிறார்கள். வாக்கு எண்ணிக்கை 10 சீட்டு, 15 சீட்டுக்கு தொங்குவது காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல என்றும் திமுகவை தூக்கிப் போட்டுட்டு வாருங்கள் என கூறியுள்ளார்.
ஏற்கனவே திமுகவில் முக்கிய பொறுப்பில் ,பழ கருப்பையா இருந்த நிலையில் பழ கருப்பையாவின் இந்த அழைப்பை காங்கிரஸ் ஏற்குமா அல்லது நிராகரிக்குமா என்பது திமுக கையில்தான் உள்ளது.