திரைப்படமாகும் பாக். பெண் சீமா ஹைதரின் கள்ளக் காதலின் கதை? அவரே ஹீரோயினாகும் ஷாக் தகவல்!

Pakistan India Bollywood Actress
By Jiyath Aug 14, 2023 12:01 PM GMT
Report

இந்திய இளைஞரை காதலித்து திருமணம் செய்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதரின் கதை திரைப்படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீமா ஹைதர் - சச்சின்

பாகிஸ்தானை சேர்ந்தவர் சீமா ஹைதர் என்ற முஸ்லீம் பெண். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகளும் இருக்கிறது. இவருக்கும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சச்சின் என்ற இளைஞருக்கும் ஆன்லைன் விளையாட்டின்போது காதல் மலர்ந்துள்ளது.

திரைப்படமாகும் பாக். பெண் சீமா ஹைதரின் கள்ளக் காதலின் கதை? அவரே ஹீரோயினாகும் ஷாக் தகவல்! | Pakistani Woman Seema Haider Acting In Movie I

இதனை தொடர்ந்து தனது 4 குழாய்களுடன் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சச்சினை திருமணம் செய்து கொண்டார். இதற்காக அவர் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டும் மதம் மாறியுள்ளார். இதைத் தொடர்ந்து சீமா மற்றும் அவரின் 4 குழந்தைகளையும் கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது 'நான் சச்சினை காதலிக்கிறேன்.

எனக்கு பாகிஸ்தான் செல்ல விருப்பமில்லை. சவுதியில் இருக்கும் என் கணவருடன் இணைந்து வாழவும் விருப்பமில்லை. இந்தியாவிலேயே தங்களைச் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்" என்று சீமா தெரிவித்துள்ளார். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு தற்போது சீமா சச்சினுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்தது வருகிறார்.

கராச்சி டு நொய்டா

இந்நிலையில் தற்போது 'கராச்சி டு நொய்டா' என்ற படத்தின் ஆடிஷனில் சீமா இடம்பெற்று இளைஞர் ஒருவருடன் வசனங்கள் பேசி நடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்தை நொய்டாவை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் எடுப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில் 'ஆன்லைன் விளையாட்டின்போது இவர்களுக்கு எப்படி காதல் உருவானது என்பதையும், இந்தியாவிற்குள் எப்படி சீமா நுழைந்தார் என்பதையும் உலகுக்கு சொல்ல விரும்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார். இதற்காக சீமா ஹைதரின் கணவரையும் இந்தியா வரவழைத்து தகவல்கள் சேகரிக்க இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.