கைவிட்ட பாகிஸ்தான் அரசு : இந்திய தேசிய கொடி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறி உக்ரைன் எல்லையை கடக்கும் பாகிஸ்தானியர்கள்
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக நாடு திரும்ப, மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, போலாந்து, ஹங்கேரி நாடுகளின் எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

இந்திய தேசிய கொடிகளை உயர்த்தி, அச்சமின்றி எல்லையை நோக்கிச் செல்லுமாறு குடிமக்களை இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் இந்தியாவின் மீட்புப் பணியை உலகமே வியப்புடன் உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மாணவர்களை நிலைமை சீரானதும் எல்லையை நோக்கி செல்லுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் அரசு மாணவர்களை கைவிட்டதாகவும் எதையும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Pakistani student using indian flag to come out of ukraine... Thats power of our india and Modiji... Watch till the end.#indianstudentsinukraine #nuclearwar pic.twitter.com/dBVp4Dj4xe
— Jay (@PoojaraJaydeep) February 28, 2022
இதனால் பாகிஸ்தான் மாணவர்கள், இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், இந்த உண்மையை பகிரங்கமாக போட்டு உடைத்துள்ளார்.

இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனில் இருந்து எவ்வித தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக வெளியேற முடியும் என்பதால்
பாகிஸ்தான் மாணவ, மாணவியர் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாரத் மாதா கீ ஜே என உரக்க கூறி வருகின்றனர்.