வானில் பெய்த பண மழை; மகன் திருமணத்திற்கு தந்தை செய்த சம்பவம் - வைரலாகும் வீடியோ

Pakistan Marriage Money
By Karthikraja Dec 29, 2024 09:00 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

மகன் திருமணத்திற்காக தந்தை வானிலிருந்து பண மழை பொழிய செய்துள்ளார்.

திருமணம்

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும். ஆனால் தற்போது பலரும் அதை தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தும் நிகழ்வாக பணத்தை வாரி இறைத்து மிக ஆடம்பரமாக திருமணம் நடத்தி வருகின்றனர். 

pakistan marriage cash shower

வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாக திருமணம் நடத்தி வரும் நிலையில், நடுத்தர மக்களும் ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டிய சமூக அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பண மழை

இதே போல் தற்போது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு விமானத்தை வாடகைக்கு எடுத்து அதிலிருந்து பண மழை பொழிய செய்துள்ளார். 

pakistan wedding cash shower

தனது மகன் மற்றும் மருமகளை விமானத்தில் அழைத்து சென்ற அவர் தனது சம்பந்தி வீட்டின் மேலே பறந்தவாறு விமானத்தில் இருந்து பல லட்சக்கணக்கான பணத்தை கீழே தூவியுள்ளார். வானில் இருந்து மழை பொழிவது போல பணம் கொட்டுகிறது. அப்போது அங்கிருந்த மக்கள் அதை எடுத்துள்ளனர். 

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த பணத்தையும் சேர்த்து சம்பந்தி வீட்டில் வரதட்சிணையாக வாங்கி இருப்பார் என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.