மகளின் தலையில் கேமரா பொருத்திய தந்தை - மகள் சொன்ன காரணம்
மகளின் தலையில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் தந்தையின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தை
பொதுவாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். அதற்காக வெளிய செல்வதற்கு கட்டுப்பாடு விதிப்பார்கள்.
வீட்டிற்கு வர சிறுது தாமதம் ஆனால் கூட உடனே தொலைபேசியில் அழைத்து பேசுவார்கள். ஆனால் தந்தை ஒருவர் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்.
தலையில் கேமரா
இந்த வினோத சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. தலையில் கேமராவுடன் அந்த பெண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பேசிய அவர், எனது பாதுகாப்புக்காக என் தலையில் செக்யூரிட்டி கேமராவை என் தந்தை பொறுத்தியுள்ளார். வீட்டில் இருந்தபடியே நான் எங்கே செல்கிறேன் என்பதை அவர் கண்காணித்து வருகிறார் என பேசினார்.
Pakistan??
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 6, 2024
pic.twitter.com/Hdql8R2ejt
இது உங்களுக்கு அசவுகரியமாக இல்லையா என கேட்கப்பட்ட கேள்விக்கு, தந்தையின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.அவர் எது செய்தலும் எனது நல்லதற்கு தான் செய்வார் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் மகளின் மீது உள்ள அக்கரைக்கு தந்தையை பாராட்டி வரும் நிலையில், இது அந்த பெண்ணின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.