துருக்கி நில நடுக்கம் : ரூ 247 கோடியை நன்கொடையாக கொடுத்த மர்ம மனிதர்

Pakistan Earthquake
By Irumporai Feb 14, 2023 10:50 AM GMT
Report

 துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக உயிர் பலி அதிகரித்து வருகின்றது ,ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அண்டை நாடுகளான சிரியாவையும் கடுமையாக பாதித்திருக்கிறது. இதனிடையே துருக்கியில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்திருந்தார்.

தொடர் நிலநடுக்கம் 

தொடர் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தன. அதன்படி மீட்புக்குழு, மருத்துவ குழு ஆகியவற்றை இந்தியா உட்பட பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு வழங்கி வருகின்றன.

30 மில்லியன் அமெரிக்க டாலர்  

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவிற்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்திருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

துருக்கி நில நடுக்கம் : ரூ 247 கோடியை நன்கொடையாக கொடுத்த மர்ம மனிதர் | Pakistani Donated 30 Million Usd For Turkey

இந்த ட்வீட் பலரையும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவிற்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்திருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த ட்வீட் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.