மேட்சில் தோற்ற பாகிஸ்தான் - Vlog செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் யுடியூபர் சுட்டுக்கொலை!!
இந்தியா பாகிஸ்தான்
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த 9-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. முதல் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
எளிய இலக்கை நோக்கி களம் கண்ட பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 80/4 என வெற்றி முனைப்பில் இருந்து பிறகு இறுதியில் 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொலை
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி தான் ஆடிய 2 ஆட்டங்களிலும் அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிராக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இந்த நிலையில் தான், போட்டியை Vlog செய்து கொண்டிருந்த பாகிஸ்தானி யூடியூபர் ஒரு பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கராச்சியில் உள்ள மொபைல் சந்தையில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூடியூபர் கராச்சியில் உள்ள மொபைல் மார்க்கெட்டுக்குச் சென்று பல கடைக்காரர்களின் வீடியோ பைட்டுகளை எடுத்து யுடியூபர் vlog செய்து வந்துள்ளார். அவ்வாறு Vlog செய்து வந்த சாத் அப்போது பாதுகாவலர் ஒருவரையும் படம்பிடிக்க எண்ணி அணுகியுள்ளார்.
அப்போது இருவரும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில், இறுதியில் நிதானமிழந்த காவலர் யூடியூபரை சுட்டுள்ளார். இதில் சாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாத், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.