அரிதான கர்ப்பம் - 1 மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்ற 27 வயது பெண்!

Pakistan World
By Jiyath Apr 21, 2024 10:58 AM GMT
Report

இளம்பெண் ஒரு ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 

கர்ப்பிணி பெண் 

பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டியை சேர்ந்த தம்பதியினர் முகமது வஹீத்தின் - ஜீனத் வஹீத் (27). கர்ப்பிணியாக இருந்த பிரசவ வலி காரணமாக அங்குள்ள தலைமையக மருத்துவமனையில் இரவில் அனுமதிக்கப்பட்டார்.

அரிதான கர்ப்பம் - 1 மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்ற 27 வயது பெண்! | Pakistan Woman Gives Birth To Six Babies

அடுத்த நாள் காலை 6 மணிக்கு ஜீனத் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரு மணி நேரத்திற்குள் 6 குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளார்.

மனைவியுடன் மட்டும் தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மனைவியுடன் மட்டும் தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

6 குழந்தைகள் 

இந்த 6 குழந்தைகளில் நான்கு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் ஆவர். இவர்கள் இரண்டு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாயும் அவரின் 6 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிதான கர்ப்பம் - 1 மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்ற 27 வயது பெண்! | Pakistan Woman Gives Birth To Six Babies

இருப்பினும் குழந்தைகளை மருத்துவர்கள் இன்குபேட்டரில் வைத்துள்ளனர். 4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.