மிரட்டல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் - இறுதி போட்டிக்குள் நுழைந்தது
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
பாகிஸ்தான் மிரட்டல் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, ஆஃகானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைபட்ட நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் போக்கு மாறியது. பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா கடைசி ஓவிரின் முதல் 2 பந்துகளில் சிக்சர்களை வீசினார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு மிரட்டல் வெற்றியை பெற்று தந்த நசீம் ஷாக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.