பாகிஸ்தான் என்ன உங்களுக்கு கறிவேப்பிலையா? இம்ரான்கான் கோபம்
பாகிஸ்தானை கறிவேப்பிலை போல அமெரிக்க பயன்படுத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அல் குவைதா தலைவர் பின்லேடனை கொல்ல அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் தயவு தேவையாக இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவின் நடவடிக்கைகள் மாறி விட்டன.
ஆப்கனை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறி வருகிறது.ஆப்கனில் ஏற்பட்டு உள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணவே, பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்துகிறது
மற்றபடி நிலையான கூட்டுறவுக்கு இந்தியாவுக்குத் தான் அமெரிக்கா நட்புக் கரம் நீட்டுகிறது. பாகிஸ்தானை உணவுக்கு தேவைக்கு மட்டுமே கறிவேப்பிலை பயன்படுத்துவது போல், பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்துவதாகவும் மேலும். ஆப்கன் அதிபராக அஷ்ரப் கனி இருக்கும் வரை அமைதி பேச்சிக்கு நம்பிக்கை இல்லை என, தலிபான்கள் தெரிவித்துள்ளதாக கூறினார்.