இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் டிரெண்டாகும் #Indianeedsoxygen

india oxygen
By Fathima Apr 23, 2021 09:28 AM GMT
Report

இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் #Indianeedsoxygen என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணி்க்கை 3 லட்சத்தை கடந்துள்ளது, 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சிகிச்சைக்கு இடம் கிடைக்காமல் மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் காத்துக்கிடக்கும் அவல நிலை உள்ளது, உயிரிழந்தவர்களை ஒட்டுமொத்தமாக போட்டு எரிக்கும் சூழல் இருக்கிறது.


இதற்கிடையே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு போதிய ஆக்சிஜன் இல்லாததால் மரணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக #Indianeedsoxygen என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானில் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக் மூலம் பாகிஸ்தான் பிரதமருக்கு அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர், இத்துயர நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.