#Live 159 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் - இந்தியாவிற்கு 160 ரன்கள் இலக்கு
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டிற்கு இடம் கிடைக்கவில்லை.
அதே போல் ஹர்சல் பட்டேலுக்கு பதிலாக முகமது ஷமியும், யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ரவிச்சந்திர அஸ்வினும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். இது தவிர விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற வழக்கமான அனைத்து வீரர்களும் இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் காயம் காரணமாக விலகிய ஃப்கர் ஜமானிற்கு பதிலாக சான் மசூத் பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.
ஆசிஃப் அலி, ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா என வழக்கமான அனைத்து வீரர்களும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
இதன்பின் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
போட்டியின் முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் சிறப்பான பந்துவீச்சின் மூலம் முதல் ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுகொடுத்தார்(அதுவும் வொய்ட் மூலமே பாகிஸ்தானிற்கு கிடைத்தது).
இதன்பின் இரண்டாவது ஓவரை வீச வந்த அர்ஸ்தீப் சிங், தான் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய விக்கெட்டான பாபர் அசாமை எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றி அசத்தினார்.
பாகிஸ்தான் அணியின் மற்றொரு துவக்க வீரரான முகமது ரிஸ்வானையும் (4) அர்ஸ்தீப் சிங் தனது இரண்டாவது ஓவரில் வெளியேற்றினார்.
இதையடுத்து அதிரடியாக விளையாடிய இஃப்திகாரை இந்திய பந்துவீச்சாளர் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.