ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்

Sri Lanka Cricket Pakistan national cricket team Asia Cup 2022
By Nandhini Sep 09, 2022 09:15 AM GMT
Report

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20

துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இரு பிரிவுகளாக 6 அணிகள்

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

முதலாவது போட்டி

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் - இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில், 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

வங்காளதேசத்தை வீழ்த்திய இலங்கை

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் (பி பிரிவு) மோதிக் கொண்டது. இப்போட்டியில், இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லான வெற்றியை பெற்றது.

பாகிஸ்தான் த்ரில் வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது.

இந்தியாவை வீழ்த்திய இலங்கை

ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் மோதிக் கொண்டன. இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் தோல்வியையடுத்து, ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணி இழந்துவிட்டது.

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்தினம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் ஜெயித்தால் மட்டுமே இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணிகளுக்கிடையே பலத்த போட்டி இருந்தது. இரு நாட்டு கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனையடுத்து, ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி அடைந்தது.

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் - இந்தியா மோதிக் கொண்டன. இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

pakistan-sri-lanka-cricket-asia-cup-2022

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த இரு அணிகளும் தலா 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கிறது.

இறுதிபோட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இந்தியா 1 வெற்றியுடன் 3-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4-வது இடத்திலும் இருக்கின்றன.

இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டம் இறுதிப்போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால் கடும் பலப்பரீட்சையில் இரு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.