இந்தியாவுடன் விளையாட ஐசிசிக்கு பாகிஸ்தான் விதித்த மூன்று நிபந்தனைகள்
டி20 உலகக்கிண்ணத்தில் இந்திய அணியுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான்
2026 டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 15ஆம் திகதி நடைபெற உள்ளது.

ஆனால், இப்போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக கூறியது பரபரப்பாகவே, இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
லாகூரில் நடந்த இந்த ஆலோசனையில் இம்ரான் கவாஜா (ஐசிசி துணைத்தலைவர்), முபஷிர் உஸ்மானி ஆகியோர் மொஹ்சின் நக்வியுடன் (PCB) கலந்துகொண்டனர்.
மூன்று நிபந்தனைகள்
இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் 3 நிபந்தனைகளை ஐசிசிக்கு விதித்துள்ளது.
1. தொடர் வருவாயில் அதிக பங்கு வழங்க வேண்டும்
2. இந்தியாவுடன் இருதரப்பு போட்டிகளை தொடங்க ஐசிசியின் உதவி வேண்டும்
3. பாகிஸ்தானுடன் விளையாடும்போது இந்திய வீரர்கள் மரபுபடி கைக்குலுக்க வேண்டும்
இதற்கிடையில், 24 மணிநேரத்தில் பாகிஸ்தான் பிரதமருடன் ஆலோசனை நடத்தியப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
