எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

Pakistan
By Fathima Mar 10, 2026 08:17 AM GMT
Report

எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலியாக பாகிஸ்தானில் 16ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப்.

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதனை சமாளிக்க பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை | Pakistan School Closes For 2 Weeks

இந்நிலையில் பாகிஸ்தானில் வருகிற 16ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் உடனடியாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து அரசு அலுவலக வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் 50 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் வங்கிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், 50 சதவிகித அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை | Pakistan School Closes For 2 Weeks