T20 World Cup: இறுதிபோட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் - வழக்கம்போல் நியூசிலாந்து..!

Cricket T20 World Cup 2022 New Zealand Cricket Team Pakistan national cricket team
By Sumathi Nov 09, 2022 12:13 PM GMT
Report

நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அபாரம்

20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று முதல் அரையிறுதி போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது.

T20 World Cup: இறுதிபோட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் - வழக்கம்போல் நியூசிலாந்து..! | Pakistan Qualified For Final Defeating Nz

இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி ஆடினர். முதல் ஓவரிலேயே பாபர் அசாமுக்கு 0 ரன்னில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது.

 3வது முறை

இதனைத் தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 105 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.

T20 World Cup: இறுதிபோட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் - வழக்கம்போல் நியூசிலாந்து..! | Pakistan Qualified For Final Defeating Nz

நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச்சுகளை தவற விட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணி எப்பவும் போல அரையிறுதி வரை வந்து கோப்பை வெல்ல முடியாமல் வெளியேறியது.