பாகிஸ்தானில் 18 மணி நேர மின்வெட்டு...மக்கள் கடும் அவதி..!
Pakistan
By Thahir
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் எரிசக்தி நெருக்கடி காரணமாக 10 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர் 10 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு கிராமங்களும் இருளில் முழ்கியுள்ளது.
எரிசக்தி நெருக்கடி காரணமாக நகரப்பகுதிகளில் 10 மணி நேரமும்,கிராம பகுதியில் 18 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி பற்றாக்குறை காரணமாக மின்சார உற்பத்தி செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் மெகாவாட் மின்சார தேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan