இனிமே இதுதான் சட்டம் : பகிஸ்தானின் புது பிரதமர் அரசு ஊழியர்களுக்கு வைத்த செக் என்ன தெரியுமா ?
பாகிஸ்தானின் புது பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை குறைத்ததுடன், பணி நேரத்தையும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை 2 நாட்களிலிருந்து ஒரு நாளாக குறைத்து ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் காலை 10 மணிக்கு தொடங்கி வந்த பணிநேரம் இனிமேல் 8 மணிக்கு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே பிரதமர் அலுவலக ஊழியர்களிடம் உரையாற்றிய அவர், சேவை பணிபுரிய வந்த நாம் ஒரு நொடியைக்கூட வீணடிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவுகளிலிருந்து அந்நாடு மீண்டுவிடவில்லை. பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள், இம்ரான் கானின் தாலிபான் ஆதரவுப் போக்கு என சர்வதேச அரசியல் சூழலிலும் பாகிஸ்தான் நல்ல நிலையில் இல்லை.
மேலும், ஷெரீபின் கட்சியிலும் நவாஸின் மகள் மரியத்துக்கும் ஷெபாஸின் மகனும் பஞ்சாப் மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஹம்ஸாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி ஷெபாஸுக்குத் தலைவலியாக உருவெடுக்கக்கூடும்.
இந்தச் சவால்களையெல்லாம் தாண்டி, ஷெபாஸ் ஷெரீப் எவ்வளவு காலம் பிரதமர் பதவியில் தாக்குப்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.