இந்தியாவை தோற்கடிக்காவிட்டால் பெயரை மாற்றிக்கொள்வேன் - பாகிஸ்தான் பிரதமர் சவால்
இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தானை முன்னேற்றவிட்டால் பெயரை மாற்றிக்கொள்வேன் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் சூளுரைத்துள்ளார்.
ஷெபாஷ் ஷெரீஃப்
அண்டை நாடான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தியா தற்போது பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இந்நிலையில், இந்தியாவை தோற்கடிப்பேன் இல்லையென்றால் என் பெயரை மாற்றிக்கொள்வேன் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப்(shehbaz sharif) சவால் விடுத்துள்ளார்.
இந்தியாவை வீழ்த்துவேன்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கானுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய அவர், "பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய எனது அரசாங்கம் கடுமையாகப் பாடுபடுகிறது. பாகிஸ்தானின் நிலைமை மேம்படுவதை உறுதிசெய்ய நாங்கள் இரவும் பகலும் உழைப்போம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசீர்வதித்துள்ளார்.
நான் நவாஸ் ஷெரீஃபின் சீடன், அவரது வழியைப் பின்பற்றுபவன். அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட எனது வாழ்க்கை மீது சத்தியம் செய்கிறேன், எனது உடம்பில் சக்தி இருக்கும்வரை போராடி, இந்தியாவைத் தோற்கடித்து பாகிஸ்தானை மகத்துவமான நாடாக உயர்த்துவேன்.
குறையும் பணவீக்கம்
என் தலைமையின் கீழ் பிற நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கடன்களை நம்பி இருப்பதை விட தற்சார்பு, தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தும். 40 சதவீதமாக இருந்த பணவீக்கம் இப்போது வெறும் 2 சதவீதமாக குறைந்து இருக்கிறது." என பேசினார்.
பாகிஸ்தான் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றிடம் பெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளதோடு, மேற்கொண்டும் கடனுதவியை நாடி வருகிறது. இந்த சூழலில், உலகின் 3வது பெரிய நாடான வீழ்த்துவேன் என பேசுவதை சமூகவலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.