ஆசியகோப்பை : ஆப்கான் வீரரை பேட்டால் அடிக்க வந்த பாக். வீரர் : தடை விதிக்குமா ஐசிசி
பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று சார்ஜாவில் நடந்த சூப்பர் 4 சுற்றில் கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் த வெற்றிபெற்றது.
ஆசிப் அலி
போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 19வது ஓவரில் பரீத் பந்துவீச்சில் சிக்சர் அடித்த ஆசிப் அலி, அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார்.
பேட்டை தூக்கி அடிக்க முயற்சி
பேட்டை ஓங்கிய ஆசிப் அலி விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பரீத் ஆவேசமாக கத்திய நிலையில், ஆத்திரம் அடைந்த ஆசிப் அலி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தனது பேட்டையும் ஓங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நடுவர்களும் சக வீரர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போட்டி முடிந்ததும ஆசிஃப் அலி மைதானத்துக்குள் ஓடி வந்து அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். ஆப்கான் ரசிகர்கள் ஆசிஃப் அலி மீதும், பாகிஸ்தான் ரசிகர்கள் ஃபரித் அகமது மீதும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன.
இந்த நிலையில் ஆசிப் அலி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது