ராணுவ வீரர்கள் சென்ற ரயிலை கடத்திய கொடூரம் - வெளியான அதிர்ச்சி தகவல் !
ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ வீரர்கள்
பாகிஸ்தானின் குவெட்டா நகரிலிருந்து பெஷாவர் நகரை நோக்கிப் புறப்பட்டது. அந்த ரயில், பலுஜிஸ்தான் எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பலூஜ் கிளர்ச்சியாளர்கள் ரயில் ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ரயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த ரயில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கின்றனர். அதிலும், பல ராணுவ வீரர்கள் அந்த ரயிலில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடத்திய கொடூரம்
மேலும் கடத்தப்பட்ட ரயிலிலிருந்து பெண்களையும், குழந்தைகளையும் விடுவித்துவிட்டதாக பலூஜ் கிளர்ச்சியாளர்கள் குழு அறிவித்துள்ளது.அதே நேரத்தில் தங்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளர்ச்சியாளர்கள் குழு ஒரு அறிக்கையில் இதுவரை ஆறு ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட பயணிகள் பிணைக் கைதிகளாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.