பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு

pakistanparliament vote8pm
By Irumporai Apr 09, 2022 10:58 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று இரவு 8 மணிக்கு மேல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடியது அப்போது எதிர்கட்சி தலைவர்கள் சபைக்கு வந்திருந்தனர் ஆனால் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவு எம்பிக்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

  இந்த நிலையில் இம்ரான்கானுக்கு எதிரான அவரது கட்சி எம்பிக்கள் 30 பேரும் அவைக்கு வந்திருப்பதாக தகவல் கூறப்பட்டது.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என்று பாக். சட்டத்துறை அமைச்சர் ஃபவத் சவுத்ரி தகவல் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 8 மணிக்கு மேல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.