அடேங்கப்பா.... 1 கிலோ கோழிக்கறி 1100 ரூபாயாம்.... - விரக்தியில் பாகிஸ்தான் மக்கள்...!
பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உணவு பஞ்சம்
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளத்தால் பாகிஸ்தானில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட உணவு தானியங்கள் அழிந்து போயின. இதனால், பாகிஸ்தானில் உணவிற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் பொது மக்கள் ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வின் வெப்பத்தை எதிர்கொண்டுள்ளனர்.

உணவு பொருளின் விலைகள் பல மடங்கு அதிகரிப்பு
1 லிட்டர் பால் விலை ரூ.210க்கும், உயிருள்ள பிராய்லர் கோழியின் விலை ரூ.480 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.700யிலிருந்து ரூ780 என நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது, எலும்பு இல்லாத கோழி 1 கிலோ ரூ.1000திலிருநது ரூ.1100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம், உணவுப் பொருட்களின் விலை பாரிய அதிகரிப்பால் பாகிஸ்தானின் வாராந்திர பணவீக்கம் 31.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கடந்த ஜனவரி 2023 விலை நிலவரப்படி, வெங்காயம், கோழி, முட்டை, டீசல், பாசுமதி உடைத்த அரிசி, மூங் பருப்பு, இரி அரிசி, தூள் உப்பு, வாழைப்பழம் மற்றும் கோதுமை மாவு உட்பட 17 பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பாகிஸ்தான் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.