டி20 உலக கோப்பை - பாகிஸ்தான் அணியின் வீரர் பெயர்கள் அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 7-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளப்போகும் பாகிஸ்தான் அணியின் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் -
பாபர் அசாம் (கேப்டன்),
ஷதாப் கான் (துணை கேப்டன்),
ஆசிஃப் அலி,
ஹைதர் அலி,
ஹாரிஸ் ராஃப்,
இஃப்டிகார் அகமது,
குஷ்தில் ஷா,
முகமது ஹஸ்னைன்,
முகமது நவாஸ்,
முகமது ரிஸ்வான்,
முகமது வாசிம்,
நசீம் ஷா,
ஷாஹீன் அஃப்ரிடி,
ஷான் மசூத்,
உஸ்மான் காதிர்.
காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாத ஃபாஸ்ட் பவுலர்கள் ஷாஹீன் அஃப்ரிடி காயத்திலிருந்து மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார்.