டி20 கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் அணி...!

Pakistan national cricket team
By Nandhini 1 வாரம் முன்

நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.

டி20 கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் கடந்த 20ம் தேதி இரவு நடைபெற்றது. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதன்படி 7 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கராச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி பேட்டிங்கைத் தேர்வு செய்து ஆடியது.

சாதனைப் படைத்த பாகிஸ்தான் அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் ஏதும் இழக்காமல் 200 ரன்களை சேஸ் செய்து பாகிஸ்தான் அணி சாதனை படைத்தது. சர்வதேச டி20 போட்டிகளில் விக்கெட் இழக்காமல் 200 ரன்களை சேஸ் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ரிஸ்வான் 88*, பாபர் அசாம் 110* ரன்களை குவித்து அசத்தினர்.  

pakistan-national-cricket-team-t20-2022-