சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் - பாக். அமைச்சர் சர்ச்சை பேச்சு
சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 28 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
பாக். அமைச்சர் பேச்சு
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ,
இந்தியாவுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சிந்து நதி பாகிஸ்தானுடையது. அந்த நதி எங்களுடையதாகவே தொடர்ந்து இருக்கும். நமது தண்ணீர் அந்த நதியில் ஓடும்.
இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும். தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விட்ட இந்தியா, மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தானை பலிகடா ஆக்குகிறது" என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.