என்ன கத்தரிக்கோல் சார் இது? மொக்கையா இருக்கே: பற்களால் ரிப்பனை வெட்டிய அமைச்சர்- வைரலாகும் வீடியோ
கடை திறப்பு விழாக்களில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் கத்தரிக்கோலால் ரிப்பனை வெட்டுவது வழக்கம். உலகமெங்கிலும் இந்த வழக்கம் தான் அமலில் உள்ளது .
இந்த நிலையில் பாகிஸ்தானில் அமைச்சர் ஒருவர் தனது பற்களால் ரிப்பனை வெட்டி கடையை திறைந்து வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானின் சிறைத்துறை அமைச்சரும், பஞ்சாப் அரசின் செய்தித் தொடர்பாளருமான ஃபயாஸ் - உல்-ஹசன் சோஹன். கடந்த வியாழக்கிழமை, ராவல்பிண்டி தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கடையை திறந்து வைக்க சென்றுள்ளார்.
அப்போது, கத்தரிக்கோலால் ரிப்பனை வெட்ட முயற்சித்துள்ளார் அனால் கத்தரிக்கோலால் ரிப்பனை வெட்ட அமைச்சர் பல முறை தவறியதால், அங்குள்ளவர்கள் சிரிக்க ஆரம்பித்துள்ளனர்.
Thank God he's not a doctor who performs circumcisions https://t.co/7zKbBALJuX
— Akbar Chaudry (@AkbarChaudry) September 2, 2021
இதனால் சமயோசிதமாக செயல்பட்ட அமைச்சர் தனது பற்களால் ரிப்பனை வெட்டி கடையை திறந்து வைத்தார். அமைச்சரின் செயலால் அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியது தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவரும் நிலையில் அமைச்சர் ஃபயாஸ் - உல்-ஹசன்சோஹன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு அதில் கத்திரிக்கோல் மோசமாக இருந்ததால், தனது பற்களால் ரிப்பனை வெட்டியதாகவும் விளக்கம் கொடுத்தார்.
ஆனால் அவரது விளக்கத்தையும் ட்விட்டர் வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.